ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு மைதானத்தில் நடைபெற்றது.
கிரிக்கெட் உலகம், பெங்களூருவில் நடந்த ஆர்சிபி மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் போல்ட் பிடித்த கேட்சிற்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.
இந்த போட்டியில் விராட் கோலி பவுண்டரி லைனுக்கு விளாசிய பந்தை டெல்லி அணியின் டிரென்ட் போல்ட் அபாரமாக பிடித்தார். அதை பார்த்து விராட் கோலி இது எப்படி சாத்தியம் என்பது போல ஆச்சர்யமாக பார்த்தார். அந்த அளவுக்கு இருந்தது போல்ட்டின் கேட்ச். கேட்ச்சை பார்த்த வர்ணனையாளர்கள் ‘டிரென்ட் போல்ட், என்ன செய்கிறீர்கள்? இதுதான் ஐபிஎல்லில் நாங்கள் பார்த்த சிறந்த கேட்ச்’ என்று ஆச்சர்யம் அடைந்தனர்.கேட்ச்சை பிடித்த டிரென்ட் கூட ஒரு நொடி ஆச்சர்யம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுகுறித்து ஆட்டத்திற்கு பின் விராட் கூறும்போது, நான் அந்த கேட்சை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன். இது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் நடக்கும். இதுபோன்ற கேட்ச்சில் விக்கெட்டை இழப்பது வருத்தம் அளிக்காது என்று தெரிவித்தார்.
மேலும் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறும்போது, நான் பார்த்ததில் சிறந்த கேட்ச் இது தான் என்றார்.இந்நிலையில் டிரென்டுக்கு கிரிக்கெட் உலகத்தினர் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…