IPL 2018:விராட் கோலியைவிரட்டியடித்த சுரேஷ் ரெய்னா!எப்பவுமே நான்தான் ஐபிஎல்லில் டாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 20வது ஆட்டத்தில் மோதியது.
களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் அடித்தது.சென்னை அணியின் பேட்டிங்கில் அதிக பட்சமாக அம்பதி ரயுடா 78,சுரேஷ் ரெய்னா 54,தோனி 25 ரன்களும் அடித்தனர்.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் ரெய்னா ஒரு சாதனையை கையில் வைத்து இருந்தார். அதன்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெயருடன் வலம் வந்தார். ரெய்னா அப்போது வரை 4558 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். சில மோசமான ஆட்டங்கள் ஆடினாலும் அவரை யாரும் முந்தவில்லை.
ஆனால் கோஹ்லி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவம் மூலம் இந்த சாதனையை முறியடித்தார். அவர் 62 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதனால் ரெய்னாவின் சாதனையை முறியடித்து, 4619 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த போட்டியில் 30 ரன்கள் எடுத்து இதை 4649 ஆக உயர்த்தினார்.
ஆனால் ரெய்னா விடுவதாக இல்லை. கோஹ்லியின் சாதனையை அவர் இந்த போட்டியில் முறியடித்துள்ளார். ரெய்னா இந்த போட்டியில் அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடங்கும். இதன் மூலம் அவர் 4658 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே இப்போது அதிகபட்ச ஐபிஎல் ரன் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.