IPL 2018:வயதை பற்றி பேசியவர்களுக்கு சவுக்கடி கொடுத்த நம்ம கேப்டன் தோனி ,யுனிவர்ஸ் பாஸ் கெயில்!பிராவோ புகழாரம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இலக்கை அடையும் நோக்கில் ரன்களை விரைந்து சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் தோனியின் பேட்டிங்கை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகின்றது.தோல்வி அடைந்தாலும்,அவரின் பேட்டிங் திறனை குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேட்ச் முடிந்த பிறகு பிராவோ தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் தோனி மற்றும் கெயில் இருவரையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
“எங்களுக்கு இந்த போட்டியின் முடிவு முக்கியம் இல்லை, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது கேப்டன் தோனி, யுனிவர்ஸ் பாஸ் கெயில் ஆகிய இருவரும், அவர்களின் வயதை பற்றி பேசியவர்களுக்கு, அவர்கள் தாங்கள் எப்பொழுதும் சிறந்த வீரர்கள் என்று நிருபித்துள்ளனர்”. என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.