IPL 2018:ரசிகர்களை விட கப் அடிக்குறதுதான் முக்கியம் …!ஆனா இந்த தடவ கப் மிஸ் ஆகாது …!விராத் கோலி ஓபன் டாக்…!

Published by
Venu

வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன்  நடைபெறவுள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கூறியிருப்பதாவது:- “தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மூன்று வாரங்களாக பேட்டை விராட் கோலி கையில் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு, கடந்த 12 நாட்களாக பெங்களூருவில் நடந்து வரும் வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து வருகிறார்.

போட்டியில் பங்கேற்பதில் இருந்து தான் எடுக்கும் இடைவெளி தனக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பதாக விராட் நம்புகிறார்.

இது குறித்து விராட் கூறுகையில், “எனக்கு ஓய்வு தேவை. உடலளவில் எனக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான் தீவிரமாக செயல்பட்டேன். ஆனால், இறுதியில் எனது உடல்நலத்துக்கு அது சற்று பாதிப்பை கொடுத்தது.

தற்போது எனக்கு கிரிக்கெட் போட்டியில் இருந்து முழுமையான இடைவெளி தேவை என்பதை உணர்கிறேன். மூன்று வாரங்கள் நான் எடுத்த இடைவெளியில், எனது கிரிக்கெட் கிட்-பையை கூட நான் தொடவில்லை.

நான் மிகவும் வலுவாக உணர்கிறேன். கடந்த 12 நாட்களாக நான் இடைவிடாமல் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது 100 சதவீதமாக இருக்கிறேன். எனினும் எனக்கு 110 சதவீதம் தேவை. இன்னும் மீதமுள்ள 10 சதவீதத்தை பெற இன்னும் நேரம் வேண்டும்.

மூன்று முறை பைனலுக்கு வந்தும் கோப்பையை வெல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரசிகர்களைவிட கோப்பையை வெல்ல நான் ஆர்வமாக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறேன்.

நாங்கள் 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை 100 சதவீதம் எனது பங்களிப்பை அளிப்பேன் என்றார். மேலும், இந்த முறை அணியில் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளதால் எங்கள் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது ” என்று  பெங்களூர் கேப்டன் கோலி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

15 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

22 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

42 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago