IPL 2018:ரசிகர்களுக்கு இன்பச் செய்தி…!சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி….!

Published by
Venu

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் , சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் : 

➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை.

➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி உள்ளிட்ட எலட்ரிக்கல் சாதனங்களும், இசைக்கருவிகளும், வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவை கொண்டு வர தடை.

➤ பட்டாசுகள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், தீயை உருவாக்கும் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஹார்வாட்டர் ஃபிளாஸ்க், தண்ணீர் பாட்டில், சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர்ஸ், கத்திரிகோல், கண்ணாடி, கண்ணாடி பாட்டில்கள், கத்தி, செல் பேட்டரி, சிறிய செல் பேட்டரி, செல்ல பிராணிகள் உள்ளிட்டவை மைதானத்தின் உள்ளே அனுமதிக்கப்படாது.

➤ மொபைல் போன், டிரான்சிஸ்டர், கேமரா, ரெக்கார்டிங் கருவிகளுக்கு தடை.

➤ வெளியே இருந்து மைதானத்திற்குள் கொண்டு வரப்படும் உணவுப் பொருட்களுக்கு தடை.

➤ போட்டியை காண்பதற்கான டிக்கெட்களை வைத்துள்ள ரசிகர்கள் அனைவரும் போலீசாரின் சோதனைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

➤ தேசியக் கொடியை அவமதிப்பதை ஏற்க முடியாது.

➤ எந்த பொருளையும் தூக்கி எறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொருட்களை மைதானத்தில் தூக்கி வீசுவோர் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர்.

➤ சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தோன்றும் நபர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

➤ பிறர் முகம் சுழிக்கும் வகையில் நடந்துக் கொள்ளும், தகாத வார்த்தைகள் பேசும் நபர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.

➤ மைதானத்தில் ஏற்படும் எவ்வித அசம்பாவிதத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.

➤ செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவரும் நபர்கள் அவற்றை பாதுகாப்பு அதிகாரிகளிடமோ, போலீசாரிடமோ தர வேண்டாம்.

இந்நிலையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

19 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago