IPL 2018:யாருமே செய்யாத சாதனையை செய்த பிஞ்ச்!இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மைல்கல் !

Default Image

ஐ.பி.எல்.இல் ஒரு விந்தையான சாதனையை படைத்துள்ளார் தற்போதைய பஞ்சாப் அணி வீரர்  ஆரோன் ஃபிஞ்ச்  பெற்றுள்ளார். அது என்னவென்றால் இதுவரை நடந்த மொத்த ஐ.பி.எல். தொடர்களில் ஏழு அணிக்காக விளையாடிய முதல் வீரர் இவர் மட்டும் தான்.

Image result for aaron finch punjab

ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் நீக்கத்தை தொடர்ந்து 50 மற்றும் 20 ஓவர்களின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வுபெற வாய்ப்புள்ள நிலையில், கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Image result for aaron finch punjab

அவரின் மொஹாலி வருகைக்குப் பின், அவர் விளையாடிய அணிகளின் விவரங்கள், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைஸஸ் ஹைதராபாத், மும்பை இண்டியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் என்று நீண்டுகொண்டே செல்கின்றது.

Image result for aaron finch punjab

ஃபிஞ்ச் இது குறித்து குறிப்பிடும்போது ” உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது எனக்கு சோர்வையே தருகிறது. முன்னதாக நான் ராஜஸ்தான் அணிக்கு மாற்று வீரராகவே தேர்ந்தெடுக்கப்பட்டேன், அதில் நான் அந்த அணியின் இறுதி போட்டியில் மட்டுமே விளையாடினேன். மற்றொரு அணி புனே, அந்த அணிக்கு நான் கேப்டனாகவும் செயல்பட்டேன். அந்த அணி ஐ.பி.எல்.இல் இருந்து அந்த ஆண்டு நீக்கப்பட்டது.”

Image result for aaron finch punjab

“நான் இந்த ஏழு அணிகள் பட்டியலில் இருந்து இராஜஸ்தான் மற்றும் புனே அணிகளை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் ஏழு அதிகம் இல்லை இல்லையா?”. என்று குறிபிட்டார்.

Image result for aaron finch delhi

ஃபிஞ்ச், அவரின் திருமணத்தின் காரணமாக பஞ்சாப் அணியின் துவக்க போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவரின் ஐ.பி.எல். துவக்கம் மிக மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தொடர்ந்து இருமுறை எல்.பி.டபிள்யு. முறையில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அந்த அணியில் உள்ள ப்ராட் ஹோட்ஜ், தொடரின் எதிர்வரும் போட்டிகள் சாதகமானதாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Image result for Aaron Finch of the Rajasthan Royals reacts after being bowled

மேலும் ஃபிஞ்ச் ” ஐ.பி.எல். தொடர் துவங்கியதில் இருந்து அனைவரும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பயிற்சியாளர் ஹோட்ஜ் மற்றும் கேப்டன் அஷ்வின் ஆகிய சிறந்த வீரர்களுடன் விளையாடுவது சிறப்பாக உள்ளது. வெற்றிகரமான வீரர்களான சேவாக், யுவராஜ், கெயில் போன்றவர்களுடன் விளையாடுவது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது”.

Image result for Aaron Finch of the Rajasthan Royals reacts after being bowled

“இது ஒரு நல்ல உணர்வை தருகிறது. எங்கள் அணியில் சிறந்த இளம் வீரர்களும் உள்ளனர். T20 இல் இளைஞர்களின் அறியாமை சில நேரங்களில் மிகப்பெரியதாக இருக்கலாம், ஆனால் பல நேரங்களில் இக்கட்டான நிலையை சமாளிக்ககூடிய அனுபவம் உள்ள இளம் வீரர்களும் உள்ளனர், இது அணியில் சமநிலையில் உள்ளது”.

Image result for aaron finch rajasthan royals

சேவாக் குறித்து அவர் கூறும்போது “நான் சேவாக்கிடம் பேசும்போது அவர் சொன்னார், நான் அவரின் தலைமையின்கீழ் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிக்காக இரண்டு வருடங்கள் விளையாடியதாக கூறினார், சேவாக் சிறந்த அதிரடி வீரர், ஆட்டத்தை நன்கு கணித்து விளையாடக்கூடியவர், டி20 பற்றிய நல்ல புரிதலுடன் இருப்பவர்”. என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் “நீங்கள் ஒருவரை தொடர்ந்து கவனிக்கும்போது, அவர் நன்றாக விளையாடலாம் அல்லது விளையாடாமலும் போகலாம், போட்டியில் அனைத்தும் நாம் நினைப்பது போல் அமைவதில்லை, நாம் அதற்கு தயாராக இருக்கிறோமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்