IPL 2018:மைதானத்தில் காலணி வீச்சு, ஒரு புறம் காலணியால் ஜடேஜா கால்பந்து ஆட்டம் …!மறுபுறமோ டுப்லேசிஸ் முகம்சுளிப்பு ….!
சேப்பாக்கம் மைதானத்தில் காலணி, கொடிகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்துக்குள் காலணி, கொடிகள் உள்ளிட்டவை வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மைதானத்தில் காலணி வீசிய நாம் தமிழர் கட்சியினர் 3 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதேபோன்று மைதானத்தின் உயர்மட்ட கேலரியில் அமர்ந்திருந்த வேறு சிலரும் கொடியை ஆட்டி கோஷங்கள் எழுப்பியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காலணிகள் வீசியதால் மைதானமே ஒரு புறம் பீதியில் இருந்தாது ,ஆனால் ஜடேஜாவோ மறுபுறம் அந்த காலனியை வைத்து கால்பந்து விளையாடினார்.ஆனால் தென் ஆப்ரிக்கா வீரர் டுப்லேசிஸ் ரசிகர்களின் இந்த செயலாளால் அவர் முகம் சுளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.