IPL 2018:மைதனதுக்குள் கலக்கல் ஆட்டம் போட்ட தல தோனி,தோனி மகள் சிவா !

Default Image

நேற்று இரவு புனேவில்  ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக மனோஜ் திவாரி, மில்லர் 60 ரன்களைச் சேர்த்தனர்.

அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்ப 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார்.

இருப்பினும் சென்னை அணி கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியதால் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் என்கிடி 4 விக்கெட்டுகளையும், தாகூர், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் ஆட வந்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அம்பாதி ராயுடு 1 ரன்னில் அவுட் ஆனார். டுபிளிசிஸ் 14 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

5வது ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹர்பஜன் சிங் ஓரளவிற்கு விளையாடி ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அவுட் ஆன பின் வந்த தீபக் சஹர் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டத்தால் சென்னை அணிக்கு தெம்பு வந்தது.

பின்னர் சுரேஷ் ரெய்னா, தோனி ஜோடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரெய்னா 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணி, கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வென்று வெற்றிக் களிப்புடன் அவர்களது லீக் ஆட்டங்களை முடித்துள்ளது.

4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய என்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் தோனி தனது மகளுடன் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் தோனியின் தொப்பியை கழட்டி மீண்டும் அவருக்கு மாட்டிவிட்டு விளையாடினார். அதன் பின்னர் மைதானத்தில் தோனியின் மகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார். இதுகுறித்து வீடியோவை தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)