IPL 2018:மேக்ஸ்வெல் சரியா விளையாடமல் போனதற்கு முக்கிய காரணம் இந்த வீரர் தான்!உண்மையை உடைத்த டிடி பயிற்சியாளர்

Default Image

டெல்லி டேர் டெவில்ஸ் நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் தலைவிதியை மாற்ற தொடருக்கு முன்பிருந்தே பெரிய அளவில் திட்டங்களைத் தீட்டியது, ஆனால் மீண்டும் எழ முடியாமல் சறுக்கியது டெல்லி.

கடைசியில் தன்னுடம் மும்பை இந்தியன்ஸையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடியது டெல்லி.

Image result for ricky ponting dd

நிறைய முடிவுகள் கேள்விக்குரியனவாயின. லாமிச்சானே என்ற நேபாள் லெக் ஸ்பின்னரை முதலிலிருந்தே எடுத்திருக்கலாம் ஆனால் கடைசியில்தான் வாய்ப்பு, அதிலும் அவரால்தான் வெற்றிகளும் கிட்டின. இன்னொன்று கிளென் மேக்ஸ்வெல் சொதப்பச் சொதப்ப ஆடிக்கொண்டேயிருந்தார். இவையெல்லாம் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மீது நிறைய கேள்விகளை எழுப்பியது.

இவற்றுக்கு பதில் கூறும்போது ரிக்கி பாண்டிங் கூறியது:

ஷெட்யூல்:

எங்களுக்கு போட்டிகள் சாதகமான ஷெட்யூலில் அமையவில்லை. டெல்லியில் இல்லாமல் 5 போட்டிகள் வெளியில் ஆடினோம். இதில் ஒன்றில்தான் வென்றோம். 17 வயது சிறுவர்களுக்கு அறிமுக வாய்ப்பு கொடுத்து நாங்கள் சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருப்பது நல்ல அணுகுமுறையல்ல என்பதை உணர்ந்தோம். அதனால்தான் அனுபவ வீரர்களை பெரிய போட்டிகளில் இறக்கினோம். சன் ரைசர்ஸிடம் தோல்வியடையும் வரை எங்களுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியத் திறமைகளை மிகச்சரியாகவே தேர்வு செய்தோம் என்பது திருப்தியளிக்கிறது.

Image result for maxwell dd

நடப்பு ஐபிஎல் சீசன் ரிஷப் பந்த்துக்கு மிக அருமையான ஒரு தனித்துவ தொடராக அமைந்தது. ஆனால் டாப் ஆர்டரிமிருந்து மேலும் கூடுதல் பங்களிப்பை எதிர்பார்த்தோம், ஆனால் டாப் ஆர்டர் சீரான முறையில் ஆடவில்லை.

கிளென் மேக்ஸ்வெல் சோடைபோனதற்கு ஒரு விதத்தில் ரிஷப் பந்த் காரணம். ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறங்கி பிரமாதப்படுத்தினார். ஏலத்தில் மேக்ஸ்வெல் பெயரைக் குறிக்கும் போது 4ம் நிலை வீரர் என்றே குறித்தேன். ஆனால் ஏரோன் பிஞ்ச் திருமணத்துக்காக அவர் சென்ற போது முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது, இதனால் ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறங்கி அசத்திவிட்டார், இவரையும் மாற்ற முடியவில்லை, 5ம் நிலை கிளென் மேக்ஸ்வெலுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத டவுன் ஆர்டர், எப்போதாவதுதான் இறங்குவார்.

அவரை ஏன் தொடர்ந்து வைத்திருந்தோம் என்றால் ஒவ்வொரு ஆட்டமும் இறுதிப் போட்டியான பின்பு அணியை வெற்றிபெறச் செய்யும் வீரராகவே கிளென் மேக்ஸ்வெலைப் பார்த்தோம். மேட்ச் வின்னராக அவருக்குத்தான் வாய்ப்பு என்று உண்மையிலேயே நினைத்தோம்.

Image result for pant dd

திரும்பிப்பார்த்தால், நாங்கள் நிறைய போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். முக்கியத் தருணங்களில் சிறப்பாக நாங்கள் ஆடவில்லை, ஆனால் கடைசியில் நன்றாக முடித்தோம் என்பதில் பெருமை உள்ளது.

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்