Categories: ஐ.பி.எல்

IPL 2018:மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான்!பெங்களுருவை பதுங்க வைத்த ஹர்பஜன் !

Published by
Venu

நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் மிரட்டலாக ட்வீட் செய்துள்ளார்.

பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

போட்டியின் இறுதியில் கேப்டன் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்தவுடன், மைதானத்தில் முதல் ஆளாக ஓடிவந்து, தோனியைக் கட்டித்தழுவி பாராட்டியவர் ஹர்பஜன்சிங். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழில் மிரட்டலான ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜனின் ட்வீட்“ வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா,யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது…மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான் ”என்று தமிழில் ஹர்பஜன் ட்வீட் செய்து பின்னர் கன்னடத்திலும் ட்வீட் செய்துள்ளார்.

கடைசியில் “நீ நொறுக்கு பங்கு.. தோனி, ராயுடு” என இருவரையும் குறிப்பிட்டுள்ளார். #அன்பின் அடையாளம் என்று ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டதில் இருந்து தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

21 minutes ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

1 hour ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

2 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

3 hours ago