IPL 2018:மும்பையுடன் தோல்வி எதிரொலி!ஆரஞ்சு கேப் எதுவும் வேண்டாம் !விராத் கோலி செம டென்ஷன் !

Default Image

ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான  எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார்.

முதலில் உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் அணித்தேர்வு முதல் (நியூஸி. அணியில் இல்லாத கோரி ஆண்டர்சனைத் தேர்வு செய்தது.. மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு வாய்ப்பு அளிக்காதது), பந்து வீச்சு மாற்றம் வரை சோடைபோன கேப்டன் விராட் கோலி எவின் லூயிஸை பெவிலியன் அனுப்ப எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை, அவர் ஸ்பின்னர்களை வெளுத்துக் கட்டினார், அவர் வெளுத்துக்கட்டுவதைச் சாதகமாக்கிய ரோஹித் சர்மா ஒரு முனையில் நிலைத்து கடைசியில் பின்னி பெடலெடுத்தார். மொத்தத்தில் கோலிக்கு நேற்று தொட்டது எதுவும் துலங்கவில்லை, பேட்டிங்கில் அவர் போகப்போக மந்தமானார். வெற்றி பெற தேவைப்படும் ரன் விகிதம் எகிற எகிற கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதற்கேற்ப வலுப்பெறவில்லை.. முடிவு இன்னொரு தோல்வி.

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ரெய்னாவை அவர் முறியடித்து இன்னொரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஆரஞ்சுத் தொப்பிக்குச் சொந்தக் காரரான கோலி கூறியது:

Image result for virat kohli 2018 ipl orange cap

“இந்தத் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை. நாங்கள் தூக்கித்தான் எறிந்தோம், எங்கள் விக்கெட்டுகளை நாங்கள் பறிகொடுத்த விதங்களை மீண்டும் ஒரு முறை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓரிரண்டு நல்ல கூட்டணிகள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்திருக்கும். மும்பை நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை என்று பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna