ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது.
மும்பை அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வருகிறது. துவக்கத்தில் எதிரணி பந்துவீச்சை சிதறடிப்பதில் கைதேர்ந்தவர் ரோகித். இவருக்கு பக்கபலமாக, லீவிஸ், போலார்டு, சூர்யகுமார் யாதவ் திகழ்கின்றனர். சகோதர்களான ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யாவின் ‘ஆல்-ரவுண்டர்’ பங்களிப்பு நிச்சயம் தேவை.
பவுலிங்
‘யார்க்கர்’ ஸ்பெஷல் மலிங்கா இம்முறை பவுலிங் ஆலோசகராக மாறிவிட்டாலும், பும்ரா மிரட்டுகிறார். கடைசி கட்ட ஓவரில் கஞ்சனாக மாறும் இவரின் செயல்பாடு அசர வைக்கிறது. கம்மின்ஸ், பென் கட்டிங், முஸ்தபிஜுர் ரஹ்மான் உள்ளிட்ட ‘வேகங்கள்’ இருப்பதால் ‘லெவன்’ அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். சுழல் பணிக்கு தனஞ்செயா, குர்னால் பாண்ட்யா, அன்குல் ராய் என அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது மும்பை அணிக்கு பின்னடைவு.
இரண்டு ஆண்டுக்குப்பின் பங்கேற்கும் முதல் போட்டியில் வெற்றியை நோக்கி சென்னையும், தொடரை வெற்றியுடன் துவக்க மும்பையும் மோதுவதால் சற்று ‘சூடான டுவென்டி-20’ போட்டியை காணலாம்.
முதல் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில்தான், தொடரின் துவக்கவிழாவும் நடக்கவுள்ளது. மாலை 5 மணிக்கு துவங்கி ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அனைத்து கேப்டன்களும் கலந்து கொள்வர். இம்முறை, இன்றைய போட்டிக்கான கேப்டன்களான தோனி (சென்னை), ரோகித் (மும்பை) மட்டும் பங்கேற்பர். துவக்க விழா நிகழ்ச்சியில், ஹிர்திக் ரோஷன் பங்கேற்பார். வருண் தவான், ஜாக்குலின் பெர்னான்டஸ், பிரபு தேவா, தமன்னா என பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.அவர்களின் நடனம் தற்போது நடைபெற்றது.
இந்நிலையில் 11ஆவது சீசன் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி விவரம் : ரோஹித் (கேப்டன் ),லீவிஸ்,எஸ் யாதவ்,ஹர்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,பொல்லார்ட் ,பும்ரா,முஷ்டபிசூர் ரகுமான்,மேக்ளனகன்,மார்கண்டே,
சென்னை :ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, கே. ஜாதவ், எம்.எஸ். தோனி, டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா, எச் சிங், டி. சஹார், ஐ தஹிர், எம். வுட் ஆகியோர் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…