ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி-மும்பை அணிகள் மோதுகின்றன.இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நடப்பு சாம்பியன் மும்பை, மோதிய இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெற்றிக் கணக்கை இன்னும் தொடங் காமல் இருக்கிறது. அதே போலதான் டெல்லி அணியும். காம்பீர் தலைமையிலான டெல்லிஅணி, மோதிய இரண்டு போட்டி களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இருக்கிறது.
மும்பை அணியில் இளம் சுழல் மார்க்கண்டே மிரட்டி வருகிறார். பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் முக்கியமான விக்கெ ட்டுகளை வீழ்த்தி ஷாக் கொடுத்தார். ஆனால், மும்பை பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்கத் திணறிவருகிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை கொண்ட அந்த அணி, முந்தையை போட்டிகளில் தோற்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
டெல்லி அணியிலும் இதே சிக்கல்தான். ரிஷாப், ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல், முன்றோ, ஜேசன் ராய், கிறிஸ்டியன் உட்பட டாப் பேட்ஸ்மேன்கள் இருந்தும் திணறி வருகிறது அந்த அணி. பந்துவீச்சிலும் அப்படித்தான். இந்தப் போட்டியின் மூலம் வெற் றிக் கணக்கை தொடங்க இரண்டு அணிகளுமே முனையும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.
இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன் வீரர்கள் விவரம்:ரோகித் சர்மா(கேப்டன்),லீவிஸ் ,ஹர்டிக் பாண்டியா,பொல்லார்ட் ,க்ருனால் பாண்டியா,அகிலா தனஞ்செயா,மார்கண்டே,முஷ்டபிசூர் ரகுமான்,பூம்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் விவரம் :காம்பீர்(கேப்டன்),ஜேசன் ராய்,ஸ்ரேயாஸ் அய்யர்,ரிசத் பண்ட்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,டேனியல் கிறிஸ்டீன்,டிவாடியா,நதீம்,போல்ட் ,முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…