IPL 2018:மீண்டும் களைகட்டிய ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா …!சென்னை சூப்பர் கிங்ஸ் என்ட்ரி செம ஜோரு…!

Default Image

கடந்த 2007-ம் ஆண்டு  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. 51 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்,சன் ரைசர்ஸ் ஐதராபாத் , டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

சூதாட்டப் புகாரில்  சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 2 ஆண்டுகள் தடை முடிந்து இந்த ஆண்டு மீண்டும் களமிறங்குகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகளுடன் இன்று மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியினர் பயிற்சி மேற்கொண்ட போது காண்பதற்காக குவிந்த ரசிகர்களே அந்த அணிக்கு உள்ள ஆதரவை தெரிவிக்கிறது. மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் மும்பை அணி 12 முறையும், சிஎஸ்கே அணி 10 முறையும் வென்றுள்ளன. தொடக்க ஆட்டம் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 


சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மார்க் உட், ,ஷேன் வாட்சன், முரளி விஜய், துருவ் ஷோரே, சர்துல் தாகுர், கனிஷ்க் சேத், கர்ன் சர்மா, அம்பதி ராயுடு, மிச்செல் சாண்ட்னர், எல். கிடி, மோனு குமார், ஷிட்ஸ்சர்மா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தஹீர், டூபிளசிஸ், டுவைன் பிரவோ, தீபக் சஹார், சாம் பில்லிங்க், ஆசிப், சைதன்யா பிஷ்னோய்.
இவர்கள் தோனி, ஹர்பஜன் சிங், வாட்சன், இம்ரான் தாஹீர், ஜடேஜா, பிராவோ உள்ளிட்டோர் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.


மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா, ராகுல் சஹார், பட் கம்மின்ஸ், பென் கட்டிங், அகிலா தனஞ்ஜெயா, பால் டூமினி, இஷான் கிஷன், சித்தேஷ் லட், எவின் லுவிஸ், சரத் லும்பா, மயங்க் மார்கண்டே, மிட்சேல் மெக்ளேனகன், மோஷின்கான், முஸ்தஃபிசுர் ரஹ்மான், நிதீஷ், ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, பொல்லார்ட், அங்குல்ராய், பிரதீப் சங்வான், தஜீந்தர் சிங், ஆதித்யா தரே, செளரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், ஜேசன் பெண்டர்ஹாப்.
இவர்களில் ரோஹித் சர்மா, பும்ரா, கம்மின்ஸ், போலார்ட், டுமினி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு வலு சேர்ப்பர்.

நடப்புச் சாம்பியனான மும்பை அணி சொந்த மைதானத்தில் விளையாடுவதோடு, ரசிகர்களின் ஆதரவும் உள்ளது கூடுதல் பலம் சேர்க்கும்.
மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் களம் காண்பதால் மீண்டும் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.


இதுதொடர்பாக சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியதாவது:
மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது கடினமானதாகும். எனினும் எங்கள் அணியில் தோனி, ஹர்பஜன் சிங், தஹீர், வாட்சன், பிராவோ போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகள் அணி வீரர்கள் ஒருங்கிணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு உத்வேகம் தருவதாக அமையும். டூபிளெசிஸ் விரல் காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார். இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் THEME SONG நேற்றிரவு வெளியானது. இதனை சமூக வலைதளங்களில் சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்