IPL 2018:மிகப்பெரிய விதிமீறல்?7 பந்துகள் வீசிய ராஜஸ்தான் வீரர் …!ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 7 பந்துகள் …!மிகப்பெரிய முறைக்கேடை கண்டுகொள்ளாத நிர்வாகம் …!
சன்ரைசர்ஸ் ஐதாராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நடந்த போட்டியில் பெரிய விதிமீறல் நடந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் விதிமுறைகளின்படி அந்த விதிமீறல் குறித்து ஏதேனும் ஒரு அணி முறையீடு செய்தால் கூட போட்டி செல்லாதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிக எளிதான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 15.5 ஓவர்களில் இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசியது. அப்போது, 12-வது ஓவரை அந்த அணி வீரர் பென் லாஹ்லின் வீசினார். அப்போது, வழக்கமாக ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீச வேண்டும் என்பதே கிரிக்கெட் விதிகளில் இருக்கும் முறையாகும். மற்றவகையில் வைய்ட், நோபால், ஆகியவற்றுக்கு மட்டுமே கூடுதலாக ஒரு பந்துவீசலாம். மற்றவகையில் ஒவருக்கு 6 பந்துகள் வீசுவதற்கு மட்டுமே அனுமதியாகும்.
ஆனால், பென் லாஹ்லின் வீசிய 12-வது ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டுள்ளன. இந்த 7 பந்துகளிலும் ஒரு வைய்டு, நோபால் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் முதல் பந்தில்
இதோ பந்துகளின் கணக்கு :
1 பந்து: லாஹ்லின் -வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்கவில்லை.
2 பந்து: லாஹ்லின்-வில்லியம்சன் 1 ரன்
3 பந்து: லாஹ்லின் -தவான் ரன் ஏதும் எடுக்கவில்லை.
4 பந்து: லாஹ்லின்-தவான் 1 ரன்
5 பந்து: லாஹ்லின்-வில்லியம்சன் 1 ரன்
6 பந்து: லாஹ்லின்-தவான் பவுண்டரி அடித்தார்
7 பந்து: லாஹ்லின்-தவான் 1 ரன்
இந்த விவகாரம் இதுவரை இரு அணிநிர்வாகத்தினராலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலும் கிரிக்கெட் விதிமுறைகளின்படி இதுமிகப்பெரிய தவறாகும்.
களத்தில் இருக்கும் நடுவர் இதை தடுத்திருக்க வேண்டும், அல்லது லெக் அம்பயர் கவனத்திருக்க வேண்டும். மேலும், இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறைந்த ஸ்கோர் செய்ததால், எந்தவிதமான பாதிப்பும் ஒருபந்து கூடுதலாக வீசியதால் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
ஒருவேளை மிகப்பெரிய ஸ்கோரை ராஜஸ்தான் அணி அடித்திருந்து, கூடுதலாக வீசப்பட்ட ஒருபந்தின் மூலம் ரன், அல்லது, விக்கெட் கிடைத்திருந்தாலோ அது போட்டியின் முடிவை மாற்றி இருக்கும்.
கிரிக்கெட் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு மேல் தொடர்ச்சியாக அவரே கூடுதலாக ஒரு பந்துவீசுவது குற்றமாகும். 12-வது ஓவரில் முதல் இரு பந்துகளை வில்லியம்ஸனுக்கும், அடுத்த பந்துகளை தவாணுக்கும், அடுத் பந்தை வில்லிம்ஸனுக்கும், கடைசி இரு பந்துகள் தவாணுக்கும் வீசப்பட்டு. ஒட்டுமொத்தமாக 7 பந்துகள் வீசப்பட்டன. இந்த ஓவரில் ஒருபவுண்டரி உள்ளிட்ட 8 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதில் கூடுதலாக வீசப்பட்ட ஒருபந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வர்ணனையிலும், இணைதளத்திலும் விவாதிக்கப்பட்டாலும், இரு அணிகளின் நிர்வாகம் தரப்பிலும் இதுவரை எந்தப் புகாரும் கூறப்படவில்லை. ஐபிஎல் நிர்வாகம், அல்லதுபிசிசிஐ அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை யாரேனும் புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.