IPL 2018:மனதளவில் மிகவும் மகிழ்ச்சி..! உடல் அளவில் காயம்…!6 பந்துகளையும் நானே பேட்டிங் ..!அதனால் கடைசி பந்தில் சிக்ஸ் ..!ஜதேவ் மாஸ்டர் பிளான் …!
சென்னை அணி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் களமிறங்கிய மும்பை அணியில், அதிரடி வீரர் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் குர்னல் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சென்னை அணியில், தொடக்க வீரர்கள் வாட்சன், ராயுடு ஆகியோர் ஏமாற்றமடையச் செய்தனர். சுரேஷ் ரெய்னா 4 ரன்களிலும், தோனி 5 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், தனி ஒருவராகப் போராடிய பிராவோ, மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 68 ரன்களைக் குவித்தார்.
6 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிராவோ அவுட் ஆனதால், வெற்றியை வசப்படுத்த மும்பை வீரர்கள் தீவிரம் காட்டினர். ஆனால், கடைசி ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஜாதவ், சிக்சர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்மூலம், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
பின்னர் ஆட்டநாயகனாக பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டாலும், காயத்துடன் பினிஷிங் செய்த ஜாதவுக்கு பாராட்டு மழை குவிந்தன. பின்னர் போட்டி குறித்து பேசிய ஜாதவ், “மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால், உடல் காயத்தால் வருந்துகிறது. இன்னும் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டேன் என நினைக்கிறன். வெற்றி வாய்ப்பை பிராவோ கொடுத்தார். ஆனால், என்னால் ஓட முடியவில்லை. அதனால், இம்ரானிடம், 6 பந்துகளையும் நானே பேட்டிங் செய்ய போகிறேன் என சொல்லிவிட்டேன். 6 பந்துகளில் 7 ரன்கள் என்பதால் அவர்கள் ஒரே மாதிரி லெந்த் பந்துகளை வீசினார்கள். ஒரே ஒரு பெரிய ஷாட் மட்டுமே தேவைப்பட்டது. எனது உடலால் எப்படி தாக்குப்பிடிக்க முடிகிறது என முதலில் பார்த்துக் கொண்டேன்” என்றார் ஜாதவ்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.