காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
ஆனால் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று 8 மணிக்கு சென்னை அணி மற்றும் கோல்கத்தா அணி மோதும் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஐபிஎல் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டி காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு செல்போன் உபயோகிக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே கைது செய்தனர் போலீசார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…