IPL 2018:பேட்டிங்கையும் கேப்டன்சியையும் பிரித்தறிந்து பணியாற்றுவதுதான் சிறந்தது!தினேஷ் கார்த்திக்
பேட்டிங்கையும் கேப்டன்சியையும் பிரித்தறிந்து பணியாற்றுவதுதான் சிறந்தது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா(59), ரஸ்ஸல் (41),உத்தப்பா (35),லின் (31),கேப்டன் கார்த்திக் (19) ரன்களும் அடித்தனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட்,மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.கடைசி ஓவரில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் திவாட்டியா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்தது.அந்த அணியில் அதிக பட்சமாக மேக்ஸ்வெல்(47),பண்ட்(43) ரன்கள் அடித்தனர்.14.2 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா பந்துவீச்சில் சுனில் நரைன் ,குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெரிய வெற்றியை பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தோல்விக்குப் பின்னால் பெறும் வெற்றி குறித்து பேசியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் டெல்லி அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது,ஷ்ரேயஸ் ஐயருக்கு திட்டமிட்டே வீசினோம், ராணாவின் கேட்ச்தான் அதில் சிறப்பம்சம். கடைசியில் வெற்றிதான் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தகைய தினங்களில்தான் நாம் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் வேலை செய்கிறது. ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் தெரிந்தே நோக்கத்தை நிறைவேற்றவே தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்கள் உயர்தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். தோல்வியடையும் நாட்களில் உறங்கி எழும்போது நிறைய சிந்தனைகளுடன் விழிக்கிறோம். இது எனக்கு பழகி விட்டது.
பேட்டிங்கையும் கேப்டன்சியையும் பிரித்தறிந்து பணியாற்றுவதுதான் சிறந்தது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.