IPL 2018:பேட்டிங்கிலும் தோனியை பின்பற்றுகிறாரா கோலி?நேற்றைய போட்டியில் சேஸ் மாஸ்டர் களத்தில் இருந்தும் வெற்றியடையவில்லை ?காரணம் என்ன ?
நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் களத்தில் இருந்தும் பெங்களுரு அணியால் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 94 ரன்களைக் குவித்தார். மற்றொரு வீரரான எவின் லிவிஸ் 65 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. விராட்கோலியைத் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 92 ரன்களுடன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருநதார்.
இந்நிலையில் உலகின் தலை சிறந்த சேஸ் மாஸ்டர் என்றால் அதில் கோலியும் ஒருவர் என்பதை அனைவரும் அறிந்ததே.இதேபோல் நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் களத்தில் இருந்தும் பெங்களுரு அணியால் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை.இதனால் விராத் கோலியை பலரும் சமூக வலைதளங்களில் வசைபாடுகின்றனர்.அதே போல் அவருக்கு பாராட்டும் வருகின்றது.ஏனென்றால் விராத் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கியுள்ளார் என்பதே அனைவரும் வசைபாட முக்கிய காரணம் ஆகும்.
ஆனால் இதே போல் கடந்த 15 ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் தோனியின் பேட்டிங்கை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகின்றது.
தோல்வி அடைந்தாலும்,அவரின் பேட்டிங் திறனை குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.ஆனால் தோனி களத்தில் இறங்கியதோ நடுவரிசையில் ஆகும்.இது தான் கோலியை வசைப்பாட முக்கிய காரணம் ஆகும்.ஏனென்றால் அந்த போட்டியில் தோனி கடும் முதுகு வழியால் அவதிப்பட்டார்.அப்படி இருந்தும் சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது.ஆனால் பெங்களுரு அணியோ 46 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.விராத் மனநிலை என்ன என்பதை இனி வரும் போட்டியில் தான்தெரியும். இந்த ஐபிஎல்லில் விராத் கேப்டன்சீயும் கேள்விக்கு உள்ளாகும் நிலையிலே உள்ளது. பெங்களுரு அணியின் நிலை என்னவென்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.அதேபோல் விராட் கோலி தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் ஆவர்.201 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.அதேபோல் ஐபிஎல் போட்டியிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் விராத் தான் .இவர் ரெய்னாவின் சாதனையை நேற்று முறியடித்தார்.நேற்றைய போட்டியுடன் அடித்த 92 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் போட்டியில் 4619 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.