தோனி தனது மகள் ஜிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஆட்டம் முடிந்துவிட்டது இது தந்தையின் கடமை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
பெங்களூருவில் புதன்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.