IPL 2018:பெங்களுரு அணியின் பந்துவீச்சை பந்தாடியது மும்பை அணி !ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ..!
இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன .
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .
முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர்.
யாதவ் மற்றும் இஷான் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எடுத்த நிலையில் 65 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார் .
கேப்டன் ரோஹித் 94 ரன்களை குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர்.