IPL 2018:புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணி,இரண்டாம் இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதல்!

Published by
Venu

டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள், ஐபிஎல் தொடரில் 21-வது ஆட்டத்தில் இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.

கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக நேற்றுமுன்தினம் பெங்களூரு அணியிடம் வீழ்ந்திருந்தது. டி வில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி டெல்லி அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சையும் சிதைவுக்குள்ளாக்கியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று தனது சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை சந்திக்கிறது டெல்லி அணி. தோல்விகளால் துவண்டுள்ள டெல்லி அணிக்கு கிறிஸ் கெயில் கடும் சவாலாக இருக்கக்கூடும். 2 அரை சதங்கள், ஒரு சதத்துடன் அதிரடி பாதைக்கு திரும்பி உள்ள அவர், மீண்டும் ஒரு ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். அவருடன் கே.எல்.ராகுலும் மிரட்ட காத்திருக்கிறார்.

இந்த சீசனில் பஞ்சாப் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது டெல்லி அணி. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது.

இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் டெல்லி அணி ஒட்டுமொத்தமாக எழுச்சி காண வேண்டும். காம்பீர் பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பின்னடைவாக உள்ளது. இதேபோல் ஜேசன் ராய், மெக்ஸ்வெல் ஆகியோரும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். இதனால் வெற்றிக்கான வியூகத்தில் கவனம் செலுத்தும் விதமாக டெல்லி அணி வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Published by
Venu

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…

12 minutes ago

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…

52 minutes ago

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

2 hours ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

3 hours ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

4 hours ago