ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இலக்கை அடையும் நோக்கில் ரன்களை விரைந்து சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய தோனி கூறும்போது, பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். முஜ்ஜீம் உர் ரஹ்மான் ஆட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார். பஞ்சாப் அணியினர் எங்களை விட சிறப்பாக விளையாடினர். நாங்கள் இன்னும் சில விஷயங்களை மெருக்கேற்ற வேண்டும். முதல் இன்னிங்சில் கெய்ல் விளையாடியதும், முஜ்ஜீம் பந்துவீச்சும் அவர்களுக்கு வெற்றியை தந்துள்ளது. நாங்கள் இன்னும் புத்திசாலிதனமாக பந்துவீச வேண்டும். சென்னை அணி விளையாடிய போட்டிகள் அனைத்தும் கடைசி ஓவர் வரை சென்றுள்ளது. இது தனிப்பட்ட முறையில் வீரர்களுக்கு பலவற்றை கற்றுக்கொடுத்து இருக்கும்.
பிராவோவுக்கு முன் ஜடேஜாவை களமிறக்கியதற்கு காரணம் கேட்கிறார்கள், எங்களுக்கு ஜடேஜா மீது நம்பிக்கை இருந்தது. அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் கொடுப்பார். இது மாதிரியான நேரங்களில் தான் அவருக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க முடியும். ஜடேஜா சிறப்பாக விளையாடினால் அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணிக்கு அது மிக பெரிய பலமாக இருக்கும்.
என் முதுகில் ஏற்பட்ட காயம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால். அது சரியாகி விடும் என்று நினைக்கிறேன். கடவுள் நான் விளையாடுவதற்கான சக்தியை கொடுத்தார். பல காயங்களுடன் விளையாடி பழகிவிட்டேன் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…