IPL 2018:பாரிதாபகரமான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி …!சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார பந்துவீச்சு …!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி ரோஹித் (11),கிஷன் (9),லூவிஸ் (29),க்ருனால் பாண்டியா (15),பொல்லார்ட் (28) ரன்களை எடுத்து வெளியேறினர்.தற்போது வரை மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஹைதராபாத் அணி தரப்பில் ஸ்டான்லகே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் :கேயின் வில்லியம்சன் (கேப்டன்)தவான்,சஹா ,மனிஷ் பாண்டே,தீபக் ஹூடா,ஷாகிப் அல் ஹாசன்,ரசித் கான்,சந்தீப் சர்மா,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித் சர்மா(கேப்டன் ),லீவிஸ்,கிஷன்,சூர்யகுமார்,பொல்லார்ட்,கட்டிங்,க்ருனால் பாண்டியா,சங்வான்,மார்கண்டே,முஷ்டபிசூர் ரகுமான்,பூம்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா அணியில் இடம்பெறவில்லை .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.