IPL 2018:பஞ்சாப் அணியால் சென்னை அணிக்கு வந்த சோதனை!பயிற்சியில் பங்குபெறாத தோனி!கேள்விக்குறியான சென்னை அணியின் நாளைய போட்டி?

Published by
Venu

ஐபிஎல் 12-வது ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே  ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பஞ்சாப்பின் மொகித் சர்மா திறமையாக பந்து வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். எனினும் கடைசி பந்தில் தோனி இமாலய சிக்ஸரை அடித்தார். 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் தோனி 79 ரன்களைக் குவித்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அவருடைய அதிரடி ஆட்டம், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.இந்நிலையில் புணேவில் நாளை நடைபெறுகிற ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை அணி.

Related image

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 79 ரன்கள் எடுத்த தோனிக்குக் காயம் ஏற்பட்டது. இது முழுவதுமாகக் குணமடையாததால் அவர் சிஎஸ்கே வீரர்களுக்கான வலைப்பயிற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.

தோனி, முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவதால் முதுகு வலி உள்ளிட்ட பல காயங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் தோனி விளையாடுவது சந்தேகம் என்று அறியப்படுகிறது. இல்லாவிட்டால், விக்கெட் கீப்பிங் பணிகளை வேறொருவரிடம் அளித்துவிட்டு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவும் வாய்ப்புண்டு. இதனால் நாளைய ஆட்டத்தில் அம்பட்டி ராயுடு விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது.

மேலும், சுரேஷ் ரெய்னா காயத்திலிருந்து குணமாகிவிட்டதால் நாளைய ஆட்டத்தில் விளையாடவும் வாய்ப்புண்டு. எனினும் சிஸ்கே அணியில் தோனி, ரெய்னா ஆகிய இரு வீரர்களும் இடம்பெறுவார்களா என்பது நாளைதான் தெரியவரும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

கனமழை எச்சரிக்கை… நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

5 minutes ago

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி!

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…

13 minutes ago

7 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை :  வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…

42 minutes ago

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் முதலிடம் பிடித்து ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!!

மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…

45 minutes ago

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…

1 hour ago

பரவிவரும் ‘பொன்னுக்கு வீங்கி ‘ அறிகுறிகள் என்ன ?.தடுப்பது எப்படி?

பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

1 hour ago