IPL 2018:பஞ்சாப்பை பின்னுக்குத் தள்ளியது சென்னை அணி!அருமையான மிடில் ஆர்டர் பேட்டிங்!அசத்திய ரயுடா !
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெறும் 20வது ஆட்டத்தில் மோதியது.
இந்நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் அடித்தது.சென்னை அணியின் பேட்டிங்கில் அதிக பட்சமாக அம்பதி ரயுடா 78,சுரேஷ் ரெய்னா 54,தோனி 25 ரன்களும் அடித்தனர்.ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர்,ரசித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்தது.அதிகபட்சமாக வில்லியம்சன் 84,யூசுப் பதான் 45 ரன்கள் அடித்தனர்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சென்னை அணியில் பவர்ப்ளேயில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்து, 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சிஎஸ்கே அணியை ராயுடுவும், ரெய்னாவும் தூக்கி நிறுத்தினார்கள் என்றால் மிகையல்ல. இருவரின் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
நடுவரிசையில் இறங்கி பேட்டிங்கில் மிரட்டிய ராயுடு, 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதேசமயம், பந்துவீச்சில் சாஹர் தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு வித்திட்டார். ஒட்டுமொத்தத்தில் இது சிஎஸ்கே அணியின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகள், என 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.