IPL 2018:பஞ்சாப்புடன் பெங்களூர் அணிவெற்றி ….!பௌலிங் சூப்பர்,பேட்டிங் சூப்பர் …!விராத் கோலி செம ஹப்பி…!

Published by
Venu

பெங்களூர் அணி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் , பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதினோறாவது ஐபிஎல் போட்டி இப்போது நடந்து வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பெங்களூர்- பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமலும் யுவராஜ் சிங் வெறும் 4 ரன்களிலும் வெளியேறினார். இதனால் அந்த அணி தடுமாறியது. பின்னர் கருண் நாயரும் (29 ரன்) கேப்டன் அஸ்வினும் (33 ரன், 21 பந்து) அணியை காப்பாற்ற போராடினர். அந்த அணி 19. 2 ஓவரில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது பஞ்சாப். முதல் ஓவரை அகபஷர் படேல், இரண்டாவது பந்தில் பிரண்டன் மேக்குலமை தூக்கினார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கோலியின் (21 ரன்) விக்கெட்டை, இளம் சுழல் முஜீப் (ஆப்கானிஸ்தான்) வீழ்த்தினார். முஜிப்புக்கு முதல் ஐபிஎல் விக்கெட் இது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 57 மற்றும் குயின்டன் டி காக் 45 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினர்.

வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘சொந்த மைதானத்தில் முதல் போட்டி எப்போதுமே முக்கியமானது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது சரியானதாக அமைந்தது. உமேஷ் யாதவ் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் பஞ்சாப் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ், கெஜ்ரோலியா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்து பந்துவீச வைக்கலாம். அவர்களுக்கு அதிக பொறுப்பு கொடுக்க விரும்பினோம். இந்த பிட்சில் 170 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். கடந்த ஆண்டை விட இந்த முறை பிட்ச் நன்றாக அமைந்திருக்கிறது. கடந்த போட்டியில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தோம். அதில் இருந்துபாடம் கற்றுக்கொண்டோம்’ என்றார்.

இதையடுத்து 11-வது ஐ.பி.எல். தொடரில் தனது முதல் வெற்றியை பெங்களூரு அணி நேற்றுப் பதிவு செய்தது. அடுத்து பஞ்சாப் அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago