சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று புனேவில் நடைபெறும் 17வது ஆட்டத்தில் மோதுகின்றது. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
பின்னர் பேட்டிங்கை தொடர்ந்த 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் அடித்தது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் அருமையாக விளையாடி இந்த ஆண்டு ஐபிஎல்லில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.பின்னர் அவர் ரன்களில் 106 ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து விளையாடிய ரயுடா(12), ரெய்னா (46),தோனி(5),பில்லிங்க்ஸ் (3)ரன்கள் அடித்தனர்.ராஜஸ்தான் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.ராஜஸ்தான் பேட்டிங்கில் அதிக பட்சமாக ஸ்டோக்ஸ் (45),பட்லர் (22),கேப்டன் ரஹானே (16) ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர்,தாகூர் ,பிராவோ,கரன் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக அதிரடி சதமும்,ஒரு விக்கெட்டும் கைப்பற்றிய வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.சென்னை ,கொல்கத்தா,சன்ரைசர்ஸ்,பஞ்சாப் அணி தலா 6 புள்ளிகளுடன் உள்ளது .இதில் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…