IPL 2018:தோனிய பார்த்த அப்டி தெரியுதா?இல்ல விராட் கோலிய பார்த்த இப்படி தெரியுதா?ரெய்னா ருசீகர தகவல்

Default Image

சிஎஸ்கே அணி பற்றி ,ஹரியாணா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் பேட்டி கொடுத்தார்.

“எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனியையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

Related image

கிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், ஏனெனில் அனைவரது கவனமும் வெற்றி பெறும் அணி மீதுதான். இந்தமுறை கோப்பையை வென்றால் முந்தைய ஐபிஎல் போட்டிகளில் இறுதிகளில் தோற்ற கசப்பான நினைவுகள் மறையும்.

தோனியும் விராட் கோலியும் இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தையே மாற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் டி20, ஒருநாள் தொடரை வென்றோம், ஒரு டெஸ்ட் போட்டியையும் வென்றோம்.

விராட் கோலிக்கு தோல்வி பிடிக்காது. கோலியின் தலைமையில் நடப்பு இந்திய கிரிக்கெட் பயமற்ற ஒரு அணுகுமுறையுடன் ஆடி வருகிறது.

Image result for sursh raina dhoni &virat ipl

இங்கிலாந்தில் உலகக்கோப்பையை வெல்ல அணி அதற்கு முன்பாக வெற்றிகளுடன் உத்வேகம் பெறுவது அவசியம்” என்றார் ரெய்னா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்