Categories: ஐ.பி.எல்

IPL 2018:தோனிக்கு கட்சிதமா ஸ்கெட்ச் போட்டு கொடுத்த விராட் கோலி!உண்மையிலே இந்த விஷயத்துல கோலிய யாரும் முந்த முடியாது?

Published by
Venu

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,அம்பாத்தி ராயுடுவின் 53 பந்து 82 ரன்களினாலும் தோனியின் 34 பந்து 70 ரன்களினாலும், இருவரும் சேர்ந்து எடுத்த மேட்ச் வின்னிங் 101 ரன்களினாலும்  பெங்களூருவின் 205 ரன்களை ஊதித்தள்ளி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

 

ராயுடு 8 சிக்ஸ், தோனி 7 சிக்ஸ், வாட்சன், பிராவோ தலா 1 சிக்ஸ் மொத்தம் 17 சிக்ஸ்களில், கடைசியில் கோரி ஆண்டர்சனை வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்து நகர்ந்த தோனி லாங் ஆனில் மேல் அடித்த வெற்றி சிக்ஸ் நாட்கள் பல பேசும். ஆட்ட நாயகனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

அதுவும் 74/4 என்று தோல்வியை எதிர்நோக்கிய போது தோனி, ராயுடு கூட்டணி மேற்கொண்ட அதிரடி ஆட்டத்தையே மாற்றியது. இதற்குக் காரணம் பவன் நெகி 3 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார் அதில் 5 சிக்சர்கள், தோனி இவரைப் புரட்டி எடுத்தார்.

அருமையாக வீசும் நியூஸிலாந்தின் கொலின் டி கிராண்ட்ஹோமுக்கு கோலி ஏன் பவுலிங் தரவில்லை? கோரி ஆண்டர்சன் வாங்க வாங்க அவருக்கு கொடுத்தது ஏன்? , 3.4 ஓவர்களில் 58 ரன்களைக் கொடுத்தார் கோரி ஆண்டர்சன். நியூஸிலாந்து அணியிலேயே இவர் இல்லை என்பது வேறுகதை. இன்னொருவர் மொகமது சிராஜ் கடைசியில் 19-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 வைடுகள் வீசியது எப்படி?

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க தொடர்ந்து அடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 207/5 என்று ஆதிக்க வெற்றியை ஈட்டியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்சின் சிறந்த பேட்ஸ்மென்களான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை 7 ஓவர்களுக்குள் பெவிலியன் அனுப்பியது, வாட்சன், நெகி ஷார்ட் பந்தை புல் ஆட முயன்று மிட் ஆனில் முடிந்தார். ரெய்னாவை தன் வேகத்தினால் திணறடித்த உமேஷ் யாதவ், கடைசியில் ரெய்னா விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் லெக் திசையில் ஒதுங்கினார் ரெய்னா, உமேஷ் ஃபுல் லெந்தில் வீசி ரெய்னாவின் கால்களுக்கு ஸ்விங் செய்தார் ரெய்னா பிளிக் ஷாட் ஆடிய போது எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் ஆனது. ரெய்னா 11 அவுட். சாம் பில்லிங்ஸ் 9 ரன்களில் சாஹல் காற்றில் ஒரு பந்தை மெதுவாகத் தூக்கி வீச மேலேறி வந்து பந்தைக் கோட்டை விட்டார் டி காக் மீதி வேலையை முடித்தார். 59/3 என்று 7வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறியது. 59 ரன்கள் வந்ததற்குக் காரணம் ஒரு முனையில் ராயுடு அற்புதமாக ஆடிவந்ததே.

தோனி மீண்டும் ஜடேஜாவை நம்பி இறக்கி மோசம் போனார். ஜடேஜாவுக்குத்தான் வரவில்லையே பிறகு என்ன அடம்? 3 ரன்களில் சாஹலின் அதிதிருப்ப பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். 9 ஓவர்களில் 76/4. ஜடேஜா பந்துவீச்சில் பந்தைத் திருப்புவதை மறந்து 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருப்பதால் சாஹல் பந்தைத் திருப்பக் கூடியவர் என்பதை மறந்திருக்கலாம்.

உமேஷ் யாதவ் மிக அருமையாக வீசி 4 ஓவர்களை முடித்து 23 ரன்களுக்கு 1 விக்கெட். சாஹலும் 15 ஓவர்களுக்குள் தன் ஸ்பெல்லை முடித்தார் 4 ஓவர்கள் 26 ரன்கள் 2 விக்கெட். இவர்கள் இருவரும் ஓவர்களை முடித்ததன் விளைவு தோனியும், ராயுடுவும் மைதானம் நெடுக பந்துகளை தூக்கித் தூக்கி அடித்தனர். அதன் பிறகு ஒரு 10-11 ஓவர்களில் 12 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராயுடு சிராஜையும், வாஷிங்டன் சுந்தரையும் நன்றாகக் கவனித்தார். சுந்தர் 1 ஓவர் வீசியதோடு சரி அதிலேயே 14 ரன்கள். அதன் பிறகு கொடுக்கவில்லை.

தோனி முதலில் நெகியை மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகு கோரி ஆண்டர்சன் தோனியின் ஹிட்டிங் பகுதிக்குள் கிறுக்குத் தனமாக வீச பந்து லாங் ஆனில் ஸ்டாண்ட்சில் போய் விழுந்தது. இதற்கு முந்தைய பந்தில் ராயுடுவுக்கு எதிராக ஒரு உரத்த எல்.பி.முறையீடு, ரிவியூ செய்தார் கோலி, ஆனால் நாட் அவுட்.

14வது ஓவரில் நெகி மீண்டும் வந்தார், தோனியைப் பார்த்தவுடனேயே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீசினார் தோனி அதனை சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக முறையாக தூக்கி சிக்ஸ் அடித்தார், பிரஸ் பாக்ஸ் கண்ணாடியைப் பதம் பார்த்தது. மீண்டும் ஒரு ஃபுல் லெந்த் பந்து இம்முறை லாங் ஆனில் சிக்ஸ். ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் விரைவில் கற்றுக் கொண்டார், அவர் கற்றுக் கொண்டதைக் கூட இவர் கற்றுக் கொள்ளவில்லை, தோனிக்கு பேக் ஆஃப் லெந்தில் ரூம் கொடுக்காமல் வீச வேண்டும். இதே ஓவரில் ராயுடுவுக்கு வீசினார் ஆனால் ஷார்ட் பிட்ச், ராயுடு அதை தூக்கி ஆன் திசையில் ஒரு சிக்ஸ் அடிக்க ராயுடு 41 பந்துகளில் இன்னொரு அருமையான அரைசதத்தை எட்டினார். இந்த ஓவரில் நெகி 19 ரன்களைக் கொடுத்தார்.

36 பந்துகளில் 80 ரன்கள் சென்னை வெற்றிக்குத் தேவை, இது சாதாரண விஷயமல்ல. 15வது ஓவரை சிராஜ் வீசினார். இறங்கி வந்து ராயுடு கவரில் சிக்ஸ் விளாசினார், இது அவருடைய 6வது சிக்ஸ்.

16வது ஓவரை கோரி ஆண்டர்சன் வீசினார், பெரிய ஷாட்டை ராயுடு ஆட எட்ஜ் ஆனது. வானில் கொடியேற்றினார், உமேஷ் யாதவ் மெதுவாக ஒரு டீ சாப்பிட்டு விட்டுக் கூட பிடிக்கலாம் அவ்வளவு உயரம் சென்ற பந்து. ஆனால் உமேஷ் கையில் வாங்கி விட்டார். எப்போதும் கிரிக்கெட்டில் கேட்ச் விட்டால் அடுத்து என்ன நடக்கும்? அதுதான் நடந்தது. ஷார்ட் பவுண்டரியான கவரில் ஒரு சிக்ஸ். பிறகு ஆஃப் ஸ்டம்பிற்கு நகர்ந்து டீப் மிட்விக்கெட்டில் ரசிகர்களிடம் தூக்கி அடித்தார், சிக்ஸ்!

24 பந்துகள் 55 ரன்கள் தேவை என்ற போது சிராஜ் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கொடுத்தார், காரணம் தோனியின் வேகமான ஓட்டம். 18வது ஓவரில் மீண்டும் கோரி ஆண்டர்சன் நேராக ஃபுல்லாக வீசினார், ஒரு வேரியேஷனே கிடையாது, தோனி அதனை நேராகத் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து ராயுடுவுக்கு ஒரு ஷார்ட்பிட்சைப் போட்டுக் கொடுக்க நான்கானது.

அப்போது 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசிய ராயுடு ஷார்ட் தேர்ட் மேனில் தட்டி விட்டு மிஸ்பீல்டுக்கு 2வது ரன் ஓடும் முயற்சியில் உமேஷ் யாதவ் நேராக ஸ்ட்ம்பைப் பெயர்க்க ரன் அவுட் ஆனார்.

12 பந்துகளில் 30 ரன்கள் தேவை. சிராஜ் வீச வந்தார், ஒரு தாழ்வான புல்டாஸை பாயிண்ட் மேல் தோனி சிக்ஸ் அடித்தார். அடுத்து பதற்றமடைந்த சிராஜ், ஒரு ஸ்லோ பவுன்சரை தோனி தலைக்கு மேல் வீச வைடு ஆனது. அடுத்த பந்து ஆஃப் சைடில் வைடு, மீண்டும் ஒரு வைடு, மொத்தம் 3 வைடுகள், ஒரு சிக்ஸ் ஏற்கெனவே வந்து விட்டது.

கடைசி ஓவர் 16 ரன்கள் தேவை. அப்போது கோரி ஆண்டர்சனை விட்டால் வேறு பவுலர் இல்லை, அவர் வந்தார். டி காக் எம்பியும் பிடிக்க முடியாமல் ஒரு பவுண்டரி பறந்தது. மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து இம்முறை பிராவோ ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ரன் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க, ஆண்டர்சன் எப்படியும் தன் பலவீனமான வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்த தோனி ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்தார் ஆனால் அது மீண்டும் ஒரு புல் லெந்த் பந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது, தோனி 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 70 நாட் அவுட், ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்ட்ரைக் ரேட் 205.88!!

கொலின் டி கிராண்ட்ஹோம் ஆல்ரவுண்டர், பந்து வீசுவார் என்று கோலிக்கு யாராவது கூறியிருக்கலாம், பாவம் மறந்துவிட்டார் போலும் இதனால் கடைசி 6 ஓவர்களை 2 பவுலர்கள் மட்டும் வீசினர், இதை எப்போதாவது குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பார்க்க முடியுமா? பார்க்கலாம் கோலி கேப்டனாக இருந்தால். நெகி 3 ஓவர் 36 ரன், சிராஜ் 4 ஓவர் 48 ரன்கள், ஆண்டர்சன் 3.4 ஓவர் 58 ரன்கள்.

முன்னதாக விராட் கோலி தொடக்கத்தில் இறங்கி 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுக்க டி காக் வெளுத்துக் கட்ட 4.2 ஓவர்களில் 35 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டது ஆர்சிபி. அப்போது தாக்குர் பந்தை மிட் ஆன் மேல் தூக்கி அடிக்க நினைத்தார் கோலி, சரியாக ஆடவில்லை, மிட் ஆனிலேயே ஜடேஜா டைவ் அடித்துக் கேட்ச் எடுத்தார். இதே ஓவரில் டிவில்லியர்ஸ் இறங்கியும், தாக்குர் கோலி, டிவில்லியர்ஸ் ஆடிய டி20 ஓவரை மெய்டனாக்கியது அவருக்கு உத்வேகம் அளித்திருக்கும், ஆனால் இந்த உத்வேகம் சில நிமிடங்கள்தான் நீடித்தது.

ஹர்பஜன் பந்து வீச வந்தார், இடது கையில் அடிக்காத குறைதான். 2வது பந்தை நடந்து வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் டிவிலியர்ஸ், அடுத்ததாக கவருக்கு மேல் ப்பூ! என்று இன்னொரு சிக்சரை ஊதினார். பிறகு ஒதுங்கிக் கொண்டு ஒரு பவுண்டரி. 17 ரன்கள் வந்தது. ஜடேஜா வீச வந்தார் ஸ்வீப்பில் ஒரு சிக்ஸ். ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடித்த பிறகுதான் ஓகோ! ஜடேஜாவா என்று பவுலரையே பார்த்தார் டிவில்லியர்ஸ். அந்த ஓவரில் 11 ரன்கள். பிராவோவை டிகாக் நேராக மிக அழகான சிக்ஸ் ஒன்றை அடிக்க 10 ஒவர்களில் ஆர்சிபி 87/1.

இம்ரான் தாஹிர் வந்தார், டிவில்லியர்ஸ் விடுவாரா, இடது கையில் ஒரு பவுண்டரி, பிறகு ஸ்வீப் சிக்ஸ். அடுத்த பந்துக்கு ஆஃப் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு லாங் ஆனுக்கு மேல்… இல்லை கிரவுண்டுக்கு வெளியே சிக்ஸ். பந்தை எடுத்து வர ஆள் சென்ற போது கூலாக ஒரு ட்ரிங்க்ஸ் அருந்தினார் டிவில்லியர்ஸ். 20 பந்துகளில் 45. வாட்சனை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து டி காக் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன் பிறகுதான் தாக்கூரின் ‘சாத்துக்குடி’ ஓவர். மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ், டிவில்லியர்ஸின் 23 பந்து அரைசதம் வந்தது. அடுத்த பந்து விரல் மூலம் வேகம் குறைத்தார், பயனில்லை நேராக ஒரு சிக்ஸ். அடுத்து கவர்திசையில் கேட்டு ஒரு சிக்ஸ் விளாசி தொடர்ச்சியாக 3 சிக்ஸ் அடித்தார். டி காக், டிவில்லியர்ஸ் 9 ஓவர்களில் 103 ரன்கள் விளாசினர்.

ஆனால் தோனியின் ஸ்மார்ட் கேப்டன்சியினால், டி காக் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பிராவோவிடம் அவரிடமே கேட்ச் கொடுத்தார், டிவில்லியர்ஸிடம் பந்து காணாமல் போன இம்ரான் தாஹிர் மீண்டும் எழுச்சியுற்று டிவில்லியர்ஸ் (30 பந்து 68, 2 பவுண்டரி 8 சிக்ஸ்) மற்றும் கோரி ஆண்டர்சனை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த ஆர்சிபி 14வது ஓவரில் 138/1 என்ற நிலையிலிருந்து மந்தீப் சிங்கின் 17 பந்து 32 ரன்களினாலும் கிராண் ஹோம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சிறு அதிரடியினாலும் 205 ரன்களை எட்டியது, ஆனால் ஸ்கோர் 220-225 ரன்கள் சென்றிருக்க வேண்டியது, மீண்டும் இம்ரான் தாஹிரைக் கொண்டு வந்து களவியூகத்தில் தன் கேப்டன்சி அனுபவத்தை தோனி வெளிப்படுத்தினார். கோரி ஆண்டர்சனுக்கு ஸ்லிப்பைக் கொண்டு வந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

205/8 என்பது ஆர்சிபிக்குப் போதவில்லை, காரணம் கொலின் டிகிராண்ட்ஹோம் பவுலிங் போடுவார் என்பதை மறந்து தோற்க வழிதேடிக் கொண்டார் விராட் கோலி. சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம், தோனி ஆட்ட நாயகன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

4 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

4 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

4 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

5 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

5 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

5 hours ago