ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த 20 தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் 64 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றிக்கு ஷான் வாட்சன் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் 51 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார்.
இப்போட்டியின் போது ரெய்னாவுடன் இணைந்த தோனி 5 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அந்த சமயம், பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர், தோனியின் காலை தொட்டு வணங்கினார். அந்த ரசிகரிடம் தோனி ஏதோ பேச, மகிழ்ச்சியில் நெஞ்சை பிடித்தபடி ரசிகர் துள்ளிக்குதித்து சென்றார். இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் காலில் ரசிகர்கள் விழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை- இந்தியா மோதிய ஒருநாள் போட்டியில், இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஜனவரி மாதத்திலும் விஜய் ஹசாரே போட்டியில் ரசிகர்கள் தோனியின் பாதத்தை தொட்டு வணங்கிய நிகழ்வு அரங்கேறியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…