IPL 2018:தொடர் தோல்வி எதிரொலி ,டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்!புதிய கேப்டன் இனி இவருதான்!

Published by
Venu

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி எதிரொலியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார்

சரியாக ஆடாத கேப்டன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.

ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், அணியும் எந்த இலக்காக இருந்தாலும் தோற்று வந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி எதிரொலியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார் .புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related image

இதற்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியிலேயே கேப்டன் பதவியைத் துறந்து வேறொருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த சந்தர்ப்பங்கள் உள்ளன.

நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி டெல்லி டேர் டெவில்ஸிலிருந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 2011 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டார். இதே அணியில் கெய்ல், டிவில்லியர்ஸ், திலகரத்னே தில்ஷான் போன்றவர்களும் இருந்தனர்.

அப்போது டேனியல் வெட்டோரி சரிவர ஆடவில்லை இதனையடுத்து தன்னையே உட்காரவைத்து விராட் கோலியிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்தார். அதன் பிறகு ஆர்சிபி 3 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றது.

2013 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியதில் ஷிகர் தவண் பங்கு அதிகம். இதனையடுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் ஷிகர் தவணிடம் கேப்டன்சி அளிக்கப்பட்டது.

ஆனால் கேப்டன்சி இவரது பேட்டிங் திறனில் பின்னடைவை ஏற்படுத்த கேப்டன்சி வேண்டாம் என்று ஷிகர் தவண் முடிவு செய்ய டேரன் சமியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது.

2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டிங் மேல் விழுந்தது. ஆனால் 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். அப்போது தன் கேப்டன்சியை உதறி ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சியை அளிக்க வழிவகை செய்தார். இது மும்பை இந்தியன்ஸ் தலைவிதியையே மாற்றியது.

2012 ஐபிஎல் தொடர், இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா. இவர் கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் சோபிக்கவில்லை. அதனால் தன்னை கேப்டன் பதவியிலிருந்து விலக்கிக் கொண்டார். அப்போது பார்மில் இருந்த ஆஸி.வீரர் கேமரூன் ஒயிட்டிடம் கேப்டன்சியை கொடுத்தார் சங்கக்காரா. ஆனால் இந்த நகர்த்தலும் கை கொடுக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

2 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

2 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

2 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

3 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

3 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

4 hours ago