IPL 2018:தொடர்ந்து மூன்று ஐபிஎல் சாம்பியன் ஆன அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் யார் தெரியுமா?
இந்திய வீரர் லெக் ஸ்பென்னர் கரண் சர்மா,2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஐபிஎல் சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் ஆவார்.
ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே அணியில் இடம் பெற்ற வீரர்கள் சிலர் இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. வேறு எந்த அணியும் தொடர்ந்து பட்டம் வெல்லவில்லை.
ஆனால், சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற தொடர்ந்து மூன்று முறை இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் கரண் சர்மா மட்டுமே என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. அந்த அணியிலும் கரண் சர்மா இடம் பெற்று இருந்தார். அதன்பின் அடுத்த ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், இவர் போன அதிர்ஷ்டம் 2017-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம்வென்றது. அதன்பின் 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கரண் சர்மா வாங்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற கரணம் சர்மா இந்த முறை 6 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக இறுதிப்போட்டியில் முக்கிய விக்கெட்டான வில்லியம்ஸனை வெளியேற்றியதும், கோஸ்வாமியை ரன் அவுட் செய்ததும் கரண் சர்மா ஆவார்.
கடந்த 3 ஆண்டுகளாக தான் இடம் பெற்றிருந்த அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்று பெருமையுடன் குறிப்பிட்டு, அணிகளின் ஹெல்மெட்டை வைத்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் கரண் சர்மா பதிவிட்டுள்ளார்.
????. ????. ???? pic.twitter.com/cCSlCEfIy7
— Karn Sharma (@sharmakarn03) May 29, 2018
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த கரண் சர்மா 6 போட்டிகளில் மொத்தம் 9.3 ஓவர்கள் வீசி, 89 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரின் எக்கானமி 9.39 ஆகும்.
சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங் இருந்தபோதிலும், இறுதிப்போட்டியில் கரண் சர்மாவுக்கு கேப்டன் தோனியும், பயிறச்சியாளர் பிளெம்மிங்கும் வாய்ப்புக் கொடுத்தனர். தனக்கு கிடைத்த வாய்ப்பை கடைசிப் போட்டியில் வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி கரண் சர்மா நிரூபித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.