டெல்லி டேர்டெவில்ஸ் அணி ,சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.
163 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, தோனி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
மறுமனையில் ராயுடுவின் அதிரடி ஆட்டம் விறுவிறுப்பை கூட்டியது. 29 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ராயுடு அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…