தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மைதானத்தில் பாம்புகளும் வரலாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் பாம்பாட்டிகளை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டம் வலுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயசங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.