IPL 2018:சென்னை மைதானத்திற்கு ஏற்பவே வீரர்கள் தேர்வு!ஸ்டீபன் பிளெமிங்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்று மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். வீரர்கள் விமான நிலையம் வந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அவர்களைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பினர். பின்னர் சென்னை வீரர்கள் பேருந்துகள் மூலம் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி பேட்டிங்கால் எளிதாக வென்றோம். சென்னைக்கு பதிலாக புனேயில் விளையாடியது சவாலான விஷயமாக இருந்தது. சென்னை மைதானத்திற்கு ஏற்பவே, ஏலத்தில் நாங்கள் வீரர்களை தேர்வு செய்திருந்தோம். கேப்டன் தோனியின் தாக்கம் அணியில் மிக அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களை விளையாடவைக்கும் தலைமைப்பண்பு தோனிக்கு உள்ளது” என்றார். சென்னை அணி கோப்பையை வெல்ல தோனி, பிளெமிங்தான் காரணம் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.