IPL 2018:சென்னை போட்டியால் அடிமேல் அடிவாங்கும் விராட் கோலி!பந்துவீச்சு தாமதத்தால் அபதாரத்தை போட்டுத் தாக்கிய ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் போட்டி நிர்வாகத்தினர் ,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர் என்று கள நிடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர்.இது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎல் நிர்வாகம், மற்றும் போட்டி நடுவர் குழு, ஐபிஎல் விதிமுறைகளை மீறி பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்காக, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பதாக அறிவித்தது.
மேலும், பெங்களூரு அணி பந்து வீச அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் குற்றச்சாட்டில் முதல் முறையாக சிக்குவதால், இந்த அளவு குறைவான அபராதம் விதிக்கப்பட்டதாகவும் ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.