11-வது ஐபிஎல் போட்டிகள் புனேயில் திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம்.
இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் உருவானது. புனேயில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால் மைதானத்திற்கு தேவையான நீரினை மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்வதில் சிக்கல் உருவாகியிருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் புனேவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது மைதானத்திற்கு தேவையான நீரினை எப்படி கொடுப்பீர்கள் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று அதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தை பராமரிக்க தேவையான நீரினை பாவனா அணையில் எடுத்துவந்து மைதானம் பராமாிக்கப் படும். இதற்கு மாநில அரசிடம் சம்மதம் பெறப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நீரினை ஒருபோதும் மைதானத்திற்கு பயன்படுத்த மாட்டோம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி புனேயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…