IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் தோல்வியை என்னால் தங்கவே முடியவில்லை ….!மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் கலக்கம் …!

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளிடத்திலும் தோல்வி கண்டதை ஜீரணிக்க முடியவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

நேற்று டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் (சன் ரைசர்ஸ் கேப்டன்) முதலில் மும்பை இந்தியன்ஸை களமிறங்கப் பணித்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சுத் தரத்தை முற்றிலும் குறைவாக எடைபோட்டு ஏதோ ஒவ்வொருவரும் ஒரு விவ் ரிச்சர்ட்ஸ் என்பது போல் மட்டையைச் சுழற்றினர், ஆனால் பந்து சிக்கவில்லை, மாறாக ஆட்டமிழந்ததுதான் நடந்தது.

Image result for rohit sharma 2018 ipl sad

சந்தீப் சர்மா தன் முதல் பந்தையே ரோஹித் சர்மாவுக்கு உள்ளே கொண்டு வந்து வெளியே எடுத்தார், இது முதல் தர டெஸ்ட் போட்டி பந்து, பீட்டன் ஆனார் ரோஹித். அதே ஓவரிலேயே புல் ஷாட் ஆடப்போய் கொடியேற்றினார், ஆனால் 3 பேர் அந்தக் கேட்சுக்குக் குழும பின்னால் ஓடி வந்து கேட்சை விட்டார் ஹூடா.

பிறகு இஷான் கிஷனும் மேலேறி வந்து ஆட முயன்று இன்சைடு எட்ஜில் ஒரு பவுண்டரியும், வெளிவிளிம்பில் பட்டு இன்னொரு பவுண்டரியும் சந்தீப் சர்மாவை அடித்தார்.

உடனேயே ரஷீத் கான் கொண்டு வரப்பட இஷான் கிஷன் கொடுத்த எளிதான கேட்சை சந்தீர்ப் சர்மா மிட் ஆஃபில் கோட்டை விட்டார். இந்த ஓவரில் ரஷீத் கான், இஷான் கிஷனை ஆட்டி எடுத்தார். கடைசியில் மிகவும் சாதாரணமான ஷாட்டில் கவுலிடம் ஆட்டமிழந்தார். இப்படியே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பெரிய ஆக்ரோஷம் காட்டுகிறோம் பேர்வழி என்று சன் ரைசர்ஸின் தரமான பந்து வீச்சுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் ஆடி சொதப்பியதில் ஸ்கோர் 150க்கும் குறைவாக மட்டுப்பட்டது.

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு ரோஹித் கூறும்போது, “தொடர் மிகவும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. பிட்ச் வேறுரகம், நாங்கள் விரைவில் எங்களை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவில்லை.

இரண்டாவது முறையும் நெருக்கமாக வந்து தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை.இன்னும் நாங்கள் கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம். இது நீளமான தொடர் எனவே மீண்டெழ வாய்ப்பு அதிகம் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்