IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு செமையாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஐதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் ரசிகர்களின் பலத்த வரவேற்புகளுக்கு இடையே இன்று சென்னை வந்தடைந்தனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். இதனை அடுத்து, பேருந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.