மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி, 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க வீரராகக் களம் இறங்கிய ஷேன் வாட்சன் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக விளாசினார். சுரேஷ் ரெய்னா 32 ரன்களில் ஆட்டமிழக்க, வாட்சனின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. 51 பந்துகளில் அவர் சதம் அடித்து அசத்தினார்.
9 பந்துகள் மீதமிருந்த நிலையில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடனும், ராயுடு 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 3 வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பை வழங்கப்பட்டபோது, அரங்கமே அதிர்ந்தது.
இந்நிலையில் மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.இந்நில்லையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…