IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகள் புனேவுக்கு மாறியதன் எதிரொலி …!சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம்…!
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புணேவுக்கு சென்னையில் நடைபெறுவதாக இருந்த மீதமுள்ள ஆறு ஐபிஎல் ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சூப்பர் கிங்ஸ்-நைட் ரைடர்ஸ் போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் அதையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. எனினும் மைதானத்தின் உள்ளே காலணிகளை வீசியும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தின் உள்ளே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வரும் 20-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் விளையாடவிருந்தது சிஎஸ்கே. அந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இந்நிலையில் சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்குத் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் தற்போது புணேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஐபிஎல் போட்டி இனிமேலும் நடந்தால் அதற்குப் பாதுகாப்பு வழங்கமுடியாது என்று சென்னைக் காவல்துறை கூறியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.கடந்த இரு வருடங்களாக புணே அணியில் இடம்பெற்றிருந்தார்கள் தோனியும் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்கும். இதனால் புணே மைதானம் சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் புணேவில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இரு பிளேஆஃப் ஆட்டங்களும் புணேவில் நடைபெறவுள்ளதால் அதனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 20 அன்று சென்னையில் நடைபெறுவதாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் புணேவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.