IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் சிக்கல்?புனே மைதானத்தை பராமரிக்க தண்ணீர் எப்படி ஏற்பாடு செய்வீர்கள்? மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி ….
புனேவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தை பராமரிக்க தண்ணீர் எப்படி ஏற்பாடு செய்வீர்கள்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் திசைதிரும்பிவிடக்கூடும் என்பதால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. அதையும் மீறி நுழைந்த சில போராட்டக்காரர்கள், மைதானத்தில் ரவிந்திர ஜடேஜா மீது செருப்பு வீசினார்கள். இதனால், சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது.
மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பது இயலாது என்று சென்னை போலீஸார் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டனர். இதனால், சென்னையில் அடுத்தும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும், புனேவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
சூதாட்டப் புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வந்துள்ளது. இதனால், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு போட்டியையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் புனேவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தை பராமரிக்க தண்ணீர் எப்படி ஏற்பாடு செய்வீர்கள்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.