IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தண்ணில கண்டம் …!சென்னை அணியை புனேவிலும் விடாது துரத்தும் தண்ணீர் பிரச்சினை…!
தமிழகத்தின் காவிரி வாரியம் அமைக்கக் கோரிய எழுச்சிப் போராட்டங்களையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் அன்று போராட்டம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.
தற்போது அங்கும் சிக்கல் எழுந்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் ‘புனே ஸ்டேடியத்தைப் பராமரிக்க தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவிலும் வறட்சி நிலைமை நீடிப்பதை எதிர்த்து விவசாயிகள் ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை புனே மைதானத்தில் நடத்த, மைதானத்தை சர்வதேச தர புல்வெளிகளுடன் பராமரிக்க உச்ச கோடைகாலத்தில் எப்படி தண்ணீரைச் செலவழிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 330,000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும்.
வான்கடே, டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், புனே சஹாரா ஸ்டேடியத்தைப் பராமரிக்க 65 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும் என்று 2013 ஐபிஎல் போட்டிகளின் போதே பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க தற்போது மீண்டும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தண்ணீரில் கண்டம் போலும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.