IPL 2018:சென்னை அபார பந்து வீச்சு!ஹைதராபாத் அணி பேட்டிங்கில் சொதப்பல்!
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார்.
வில்லியம்சனைக் கட்டுப்படுத்த முடியுமா? இதே முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார்.
தவண் கோல்டன் டக் அடித்தார். வில்லியம்சனும், கோஸ்வாமியும் ஆடி வந்தார். சிஎஸ்கேவுக்கு அருமையான தொடக்கம்.இதையடுத்து வில்லியம்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 140 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாட உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.