IPL 2018:சென்னை அணிக்கு மேலும் மேலும் அடி …!சின்ன தல போட்டியில் இருந்து விலகல் …!உண்மையிலே சோகம்தான் சென்னை ரசிகர்களுக்கு …!

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் கிரிக்கெட் போட்டி கடந்த 10 ஆம் தேதி  கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடைபெறுகிறது.

Image result for suresh raina injured kolkata match 2018

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர் லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ் ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.

7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல் 11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Image result for ipl chennai match 2018

இந்த போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் சாம் பில்லிங்ஸின் அதிரடியில் சென்னை அணி வென்றது. போட்டியின் போது, சுரேஷ் ரெய்னா காயமடைந்தார். அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரன் எடுக்க, ஓடுவதற்கு சிரமப்பட்டார். காயம் குணமடையாததால் வரும் 15-ம் தேதி, பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை அணியில் முரளி விஜய் .டுப்லேசிஸ்,ஜாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது ரெய்னா காயமடைந்தது சென்னை அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சென்னை மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது ரெய்னா காயமடைந்தது  சென்னை ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win
america election 2025Donald Trump