IPL 2018:சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்த சிஎஸ்கேவின் தமிழ் புலவர் …!எங்கு விளையாண்டாலும் தமிழ்,பாசமும் -நேசமும் துளியும் குறையாது…!

Default Image

 

சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது என்று மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

 

காவிரி போராட்டத்தின் எதிரொலியாக,ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும்,வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.  சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி,  காவிரி போராட்டங்களை திசை திருப்பக் கூடாது என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கூறிவருகின்றன.  இந்நிலையில், கடும்  எதிர்ப்புக்கிடையே,  சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றதால் அரசியல் கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டனர். போட்டி அரங்கிற்குள்ளும் இளைஞர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெறவுள்ள எஞ்சிய 6 போட்டிகள்  வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை, ஐபிஎல்  தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுத்துவிட்ட காரணத்தால், போட்டிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் விளையாடும் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் நிலையில், 4 நகரங்களை பிசிசிஐ பரிந்துரைந்துள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், புனே, ராஜ்கோட் ஆகிய 4 நகரங்களில் சென்னை அணி விளையாடும் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும் தமிழ்,பாசமும் -நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ,எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.வழக்கம்போல் கீச்சுக்கள் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்