சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின் பதற்றத்தின் நடுவே டாஸ் போட அம்பயர் வராததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே கைது செய்தனர் போலீசார்.
இதனால் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் காரணமாக மைதானத்திற்கு 4 மணிக்கு வரவேண்டிய கிரிக்கெட் வீரர்கள் 6 மணிக்கு வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பின்வாசல் வழியாக புறப்படனர். இந்நிலையில் சென்னையில் நடக்கும் தொடர் போராட்டங்கள் காரணமாக சி.எஸ்.கே வீரர்கள் மைதானத்திற்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இதேபோல் கொல்கத்தா அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர்.பின்னர் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா அணி தாமதமாக வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனது.அனால் இந்த பதற்றத்தின் நடுவே டாஸ் போட அம்பயர் வராததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அம்பயர் நிலை குறித்து தெரியாததால் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விளையாட்டை நடத்தக்கூடிய அதிகாரிகள் யாரும் மைதானத்தில் இல்லாததால், போட்டி தொடங்குவதில் சிக்கல் நீடித்தது .பின்னர் ஒருவழியாக சரியாக O7.43 மணிக்கு மேல் டாஸ் போட்டனர்.இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…