ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டம் நடைபெற்ற போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக சஞ்சூ சாம்சன் 49, ஷ்ரேயாஸ் கோபால் 18 , அஜிங்க்ய ரஹானே 13 ரன்கள் எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய சித்தார்த கௌல் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்தி 126 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் 15.5 ஓவரில் 127 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.
அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன் 77, கேன் வில்லியம்சன் 36, ரித்திமான் சாஹா 5 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…