Categories: ஐ.பி.எல்

IPL 2018:கோப்பையை யாருக்கு? நாளை முதல் தொடங்குகிறது கோப்பைக்கான மோதல்!

Published by
Venu

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ,பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. மிகவும் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இந்நிலையில் இறுதிச் சுற்றில் போட்டியிடுவதற்கான அணியை தேர்வு செய்வதற்கான முதல் தகுதிச் சுற்று போட்டியானது நாளை புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகளுக்கிடையே மும்பையில் நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள ஹைதராபாத் அணியும் 2ம் இடத்திலுள்ள சென்னை அணியும் இதில் மோதுகிறது. வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.

இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 3ம் 4ம் இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான எலிமினேஷன் போட்டியானது நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் தோல்வி அடையும் அணி ஆட்டத்தை விட்டு வெளியேறும். வெற்றி பெரும் அணியானது முதல் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும்.

முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேஷன் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோதிக்கொள்ளும் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டமானது வரும் 25ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையேயான  இறுதிப் போட்டியானது 27ம் தேதி மும்பையில் நடைபெறும்.

வெற்றிபெறும் அணி ஐபிஎல் 2018 கோப்பையை கைப்பற்றும். இந்த போட்டிகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியில் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

13 minutes ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

5 hours ago